வருக! வருக!!

வணக்கம் கானல் நண்பர்களே!

நாளொரு புதிய தொழில்நுட்பங்கள்... மின்னல் வேக மாற்றங்கள் என்று கணிணி துறை பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்திற்க்கு ஈடு கொடுத்து புதியன கற்றல் என்பது நல்லதொரு அடிப்படை கணிணி அறிவு இருந்தால் எளிது. என்னுடைய அனுபவத்தில் பல நண்பர்கள் அடிப்படை கணிணி அறிவியல் சரியாக தெரியாமல் மேலும் புதிய தொழில்நுட்பங்கள் கற்றுக்கொள்ள இயலாமலும் திணறுகிறார்கள. அவர்களுக்காகவும் புதியவர்கள் எளிதாக கற்றுக்கொள்ளவும் இப்பதிவை ஆரம்பிக்கிறேன்

இப்பதிவில் கணிணியின் 'அ' வில் தொடங்கி என்னால் இயன்ற எல்லைகளை வரை விளக்க முயற்சிக்கிறேன்.

அடிப்படை கணிணி அறிவியல் என்பதால் கணிணி பொறியாளர்கள் (computer engineers) தூரமாக நின்று விடாமல் பதிவை வாசித்து தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டி சிறப்பாக செய்ய ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.

புதியவர்கள் வினாக்கள் எழுப்புவதன் மூலம் இப்பதிவை மேலும் சிறப்பாக எழுத எனக்கு ஊக்கமளிக்க வேண்டி...

பட்டுக்கோட்டை பாரி.அரசு

6 Comments:

  1. Unknown said...
    அய்யா பாரி வள்ளலெ !

    எப்ப கணிணி பத்தி எழுதுவிங்க?
    எதாவது எழுதுஙக! ்
    நன்றி
    வடுவூர் குமார் said...
    என்னங்க நீங்களுமா,இப்படி எழுதிவிட்டு "அப்பீட்டு ஆகிவிடுகிறது"?
    வெ.பயலின் தமிழில் C,
    மோகந்தாஸின் ஜாவா,
    மை ஃபிரண்ட்யின் மலாய் கற்க,
    சிறில் அலெக்ஸ்ஸின் ஆங்கிலம்
    இப்படி பலவற்றைப்போல் இதையும் நிறுத்திவிடாதீங்க.
    நீங்கள் எழுதுவதில் இருந்து எடுத்து,திருந்தி வேறு வேலை பார்க்க ஆரம்பித்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.
    தொடருங்கள்.
    நாமக்கல் சிபி said...
    நல்ல முயற்சி! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    சீக்கிரம் ஆரம்பிங்க! படிச்சித் தெரிந்து கொள்ள நிறைய பேர் ஆவலாய்க் காத்துகிட்டிருக்கோம்!

    -சிபி பேரரசு
    கருப்பு said...
    வாழ்த்துக்கள் தோழர்.
    Albert said...
    Welcome.
    மங்கை said...
    ஆஹா...எழுதுங்க எழுதுங்க...

Post a Comment