பாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்…

கணினி என்றால் என்ன?
உள்ளீடு (Input) -->
செயல் (Process) -->
வெளியீடு (Output)

விசைபலகை (Keyboard)

எண்பலகை (Numeric Keyboard)

நகலாக்கி (Scanner)

தொடுதிரை (TouchScreen)

அளவீடும் கருவிகள்
(Measurement Equipments)

ஒலி கருவிகள்
(Audio Device)

ஒலி, ஒளி கருவிகள்
(Video Device)

இன்னபிற…

மைய செயலகம்

(Central Processing Unit)

( மைய செயலகம் பல்வேறு கருவிகளின் தொகுப்பு, அவற்றை விரிவாக பின்பு பார்ப்போம்.)

திரை (Monitor)

அச்சு கருவி (Printer)

இன்ன பிற…

உள்ளீடு கருவிகளின் படங்கள்

விசைபலகை                                              அளவீடும் கருவிகள்

keyboard                               measurement

எண்பலகை                                                        ஒலி கருவி

numeric keyboard                                        mic

நகலாக்கி                                                             ஒலி, ஒளி கருவி

scanner                                 video

தொடுதிரை

touch screen

மைய செயலகம்

cpu

வெளியீடு கருவிகளின் படங்கள்

crt monitor lcd monitorprinterlaser printer

நண்பர் பாலபாரதி அவர்கள் சுடச்சுட பதிவெழுதி

தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடி

அறிமுகம் செய்த தமிழ்99 ஒட்டிகள் கிடைக்குமிடங்கள், அவற்றை விநியோகிக்க ஏற்ப்படுத்தப்படுகிற வலைப்பின்னல் பற்றிய தகவல்களை இங்கே தருகிறேன்....

ஒட்டிகள் உடன் தமிழ்99 கையேடு ஒன்றும் 4பக்க அளவில் கொடுக்கிறோம்... அதன் பிடிஎஃப் வடிவம்

http://tamil99.org/tamil99-typing-guide.pdf

சென்னை
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், Kaviiz Computers

ரிச்சி தெரு, KR Computers

பட்டுக்கோட்டை
SANS Computers Sales and Service

இதை மற்ற ஊர்களிலும் பரவலாக்க கணினி விற்பனை மற்றும் பராமரிப்பு சேவை வழங்குகிற நண்பர்கள் தொடர்புக்கொண்டால்... மேலும் விரிவான தகவலகள் தர இயலும்.

இப்போதைய 10,000 ஒட்டிகள் பல லட்சங்களாக பயனாளருக்கு சென்றடைவதற்க்கு உங்களுடைய ஆதரவு மிகவும் அவசியம்.

சிங்கை, மலேசியா நண்பர்கள் என்னுடைய மின்னஞ்சலுக்கு (pktPari.Arasu@gmail.com) தொடர்புக்கொண்டால் அவர்களுக்கு நான் அஞ்சலில் அல்லது நேரிடையாக வழங்க ஏதுவாக இருக்கும்.

சந்தையில் இருமொழி (தமிழ்,ஆங்கிலம்) ஆதரவை வணிகர்கள் வழங்குகிற வரை இவ்வாறான தன்னார்வலர் பணி அவசியமாகிறது.

நன்றி

வணக்கம்!

தமிழ்99 பயன்பாட்டை அதிகரிக்கும் ஆர்வத்துடனும்... புதிதாக தமிழை கணினியில் பயன்படுத்துகிறவர்களாவது தங்கிலீஸை விட்டுவிட்டு முழுமையான தமிழ்விசைப்பலகையை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலும்...

தமிழ்99 விசைப்பலகைகளை உற்பத்தி செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்....

இது தொடர்பான உரையாடலை இந்த குழும முகவரியில் பார்க்கவும்....

http://groups.google.com/group/tamil99/topics?hl=en

KL-RF007
US$5.4
1000PCS
Attan:Multimedia keyboard (Optional USB HUB)
"Windows keyboard,compatible with windows
NT/98/ME/2000/XP
PC/AT/PS-2 compatible
High-quality membrane key switch
Multiple language versions available
Multi-color available (Silver),(Dark blue),(Blue),(Purple),(Red)
21 Hot keys for easily a"KL-RF008
USD7.00/pc
1000pcs
Normal WIRELESS KEYBAORD+USB
Receiver
1.104 keys + 13 hot keys
keyboard,
2,27Mhz, 1.0-1.5M operation
distance
3, USB port for
receiver
4,Multiple language versions
available
5, Use life:over 10million
times
6,High quality membrane tactile key switch

PS2 Weired Keyboard - ரூ230-ரூ250
Wireless Keyboard - ரூ330-ரூ350 வரை உற்பத்தி செலவு ஆகலாம்....


ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் 10 விசைப்பலகைக்கான பொறுப்பேற்றுக்கொண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் உற்பத்தியை உறுதிச்செய்ய வேண்டுகிறேன்.
இரண்டாவது மிகப்பெரிய அளவில் ஆர்வலர்கள் கிடைக்கும் பட்சத்தில் நமக்கு குறைந்த விலையில் விசைபலகைகள் கிடைக்கும்.

சந்தையை விட தரமான அதே நேரத்தில் விலைகுறைவாக உற்பத்தி செய்ய முயற்சிக்கிறோம். உலகின் பல மூலைகளில் இருப்பவர்களும் அவர்களுக்குள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

விரைவில்...

முதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது.

இங்கே மிக முக்கியமான ஓரு மாணவரை உங்களுக்கு அறிமுக படுத்தி விடுகிறேன். 'சிற்பி' இவர்தான் அந்த மாணவர், இனிவரும் வகுப்புகளில், இவர் கேட்கும் கேள்விகளிலிருந்தே இவரை நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்...

கணினி என்றால் என்ன?

கணினி என்பது பயனாளர் கொடுக்கும் உள்ளீட்டை வாங்கி செயல்திட்டத்தை முடித்து பயனாளருக்கு வெளியீட்டை தரும் கருவி.

user
பயனாளர்

input -> process -> output
உள்ளீடு -> செயல்திட்டம் -> வெளியீடு


எல்லோரையும் திரும்ப,திரும்ப இதை சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிற்பி எழுந்து நின்று, அய்யா! எங்கள் வீட்டில் மாவு அரைக்கும் இயந்திரம் இருக்கிறது, அதில் எங்க அம்மா! நீங்கள் சொல்லியபடி அரிசியை உள்ளீடாக தருகிறார்கள், அது அரைத்து, மாவாக வெளியீடு தருகிறது. அப்போ நீங்கள் சொன்ன வரையறைபடி மாவு அரைக்கும் இயந்திரம் கணினி மாதிரியா! என்றார்.

இல்லை சிற்பி! நான் ஓரு தகவலை சேர்த்துச்சொல்ல வேண்டும், மாவு அரைக்கும் இயந்திரம் ஓரு இயந்திரவியல் (Mechanical) கருவி. கணினி ஓரு மின்னணுவியல் கருவி (Electronics device).

கணினி என்பது மின்னணுவியல் கருவி, அது பயனாளர் தரும் உள்ளீட்டை வாங்கி, செயல்திட்டத்தை நிறைவேற்றி, பயனாளருக்கு வெளியீட்டை தரும்.

அப்பாடா என்று மாணவர்களுக்கு சொல்லி,சொல்லி களைத்துப்போய் திரும்பினால், மீண்டும் நம்ம சிற்பி எழுந்து நிற்கிறார்.

என்னப்பா!

சிற்பி கையில் ஒரு கணக்கீடும் கருவி(Calculator), அய்யா! இங்க பாருங்க இதுவொரு மின்னணு கருவி, இதில் நான் எண்களை உள்ளீடாக தருகிறேன், அது செயலாற்றி, விடைகளை வெளியீடாக தருகிறது, அப்போ இதுவும் கணினியா? என்றார்.

அய்யகோ! நான் அப்படியே 'மே' முழியா முழித்து, இல்லைப்பா, பின்னாடி இன்னும் விளக்கம் சொல்லுறேன் என்று ஓருவழியா சமாளித்து அனுப்பிவிட்டேன்.
(எங்க ஆசிரியர் எனக்கு இவ்வளவுதான் சொல்லி கொடுத்தார் என்று சொன்னால் விடுவாய்ஙகள நம்மல :), ஆசிரியர் சொன்னா நாமெல்லாம் அப்படியே கேட்டு வளர்ந்தோம், இந்தக்காலத்து பசங்களெல்லாம் அப்படியா! எதுக்கெடுத்தாலும் கேள்வி! என்னத்த சொல்லுறது!)

அடுத்து கணினியின் பாகங்கள்...

Websites