கணினி பாகங்கள் மற்றும் படங்கள்...

விரைவில்...

கணினி என்றால் என்ன?

முதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது.

இங்கே மிக முக்கியமான ஓரு மாணவரை உங்களுக்கு அறிமுக படுத்தி விடுகிறேன். 'சிற்பி' இவர்தான் அந்த மாணவர், இனிவரும் வகுப்புகளில், இவர் கேட்கும் கேள்விகளிலிருந்தே இவரை நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்...

கணினி என்றால் என்ன?

கணினி என்பது பயனாளர் கொடுக்கும் உள்ளீட்டை வாங்கி செயல்திட்டத்தை முடித்து பயனாளருக்கு வெளியீட்டை தரும் கருவி.

user
பயனாளர்

input -> process -> output
உள்ளீடு -> செயல்திட்டம் -> வெளியீடு


எல்லோரையும் திரும்ப,திரும்ப இதை சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிற்பி எழுந்து நின்று, அய்யா! எங்கள் வீட்டில் மாவு அரைக்கும் இயந்திரம் இருக்கிறது, அதில் எங்க அம்மா! நீங்கள் சொல்லியபடி அரிசியை உள்ளீடாக தருகிறார்கள், அது அரைத்து, மாவாக வெளியீடு தருகிறது. அப்போ நீங்கள் சொன்ன வரையறைபடி மாவு அரைக்கும் இயந்திரம் கணினி மாதிரியா! என்றார்.

இல்லை சிற்பி! நான் ஓரு தகவலை சேர்த்துச்சொல்ல வேண்டும், மாவு அரைக்கும் இயந்திரம் ஓரு இயந்திரவியல் (Mechanical) கருவி. கணினி ஓரு மின்னணுவியல் கருவி (Electronics device).

கணினி என்பது மின்னணுவியல் கருவி, அது பயனாளர் தரும் உள்ளீட்டை வாங்கி, செயல்திட்டத்தை நிறைவேற்றி, பயனாளருக்கு வெளியீட்டை தரும்.

அப்பாடா என்று மாணவர்களுக்கு சொல்லி,சொல்லி களைத்துப்போய் திரும்பினால், மீண்டும் நம்ம சிற்பி எழுந்து நிற்கிறார்.

என்னப்பா!

சிற்பி கையில் ஒரு கணக்கீடும் கருவி(Calculator), அய்யா! இங்க பாருங்க இதுவொரு மின்னணு கருவி, இதில் நான் எண்களை உள்ளீடாக தருகிறேன், அது செயலாற்றி, விடைகளை வெளியீடாக தருகிறது, அப்போ இதுவும் கணினியா? என்றார்.

அய்யகோ! நான் அப்படியே 'மே' முழியா முழித்து, இல்லைப்பா, பின்னாடி இன்னும் விளக்கம் சொல்லுறேன் என்று ஓருவழியா சமாளித்து அனுப்பிவிட்டேன்.
(எங்க ஆசிரியர் எனக்கு இவ்வளவுதான் சொல்லி கொடுத்தார் என்று சொன்னால் விடுவாய்ஙகள நம்மல :), ஆசிரியர் சொன்னா நாமெல்லாம் அப்படியே கேட்டு வளர்ந்தோம், இந்தக்காலத்து பசங்களெல்லாம் அப்படியா! எதுக்கெடுத்தாலும் கேள்வி! என்னத்த சொல்லுறது!)

அடுத்து கணினியின் பாகங்கள்...

வலைப்பூக்கள்

Websites

வருக! வருக!!

வணக்கம் கானல் நண்பர்களே!

நாளொரு புதிய தொழில்நுட்பங்கள்... மின்னல் வேக மாற்றங்கள் என்று கணிணி துறை பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்திற்க்கு ஈடு கொடுத்து புதியன கற்றல் என்பது நல்லதொரு அடிப்படை கணிணி அறிவு இருந்தால் எளிது. என்னுடைய அனுபவத்தில் பல நண்பர்கள் அடிப்படை கணிணி அறிவியல் சரியாக தெரியாமல் மேலும் புதிய தொழில்நுட்பங்கள் கற்றுக்கொள்ள இயலாமலும் திணறுகிறார்கள. அவர்களுக்காகவும் புதியவர்கள் எளிதாக கற்றுக்கொள்ளவும் இப்பதிவை ஆரம்பிக்கிறேன்

இப்பதிவில் கணிணியின் 'அ' வில் தொடங்கி என்னால் இயன்ற எல்லைகளை வரை விளக்க முயற்சிக்கிறேன்.

அடிப்படை கணிணி அறிவியல் என்பதால் கணிணி பொறியாளர்கள் (computer engineers) தூரமாக நின்று விடாமல் பதிவை வாசித்து தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டி சிறப்பாக செய்ய ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.

புதியவர்கள் வினாக்கள் எழுப்புவதன் மூலம் இப்பதிவை மேலும் சிறப்பாக எழுத எனக்கு ஊக்கமளிக்க வேண்டி...

பட்டுக்கோட்டை பாரி.அரசு